பாஜகவின் "பன்னாபிரமுக் வியூகம் ".. வட இந்தியாவைபோல தமிழ்நாட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கபோகும் மோடி, அமித்ஷா.

Published : Mar 03, 2022, 01:34 PM IST
பாஜகவின் "பன்னாபிரமுக் வியூகம் ".. வட இந்தியாவைபோல தமிழ்நாட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கபோகும் மோடி, அமித்ஷா.

சுருக்கம்

தங்கள் காட்சி குறித்து ஒவ்வொருவருக்கும் எடுத்து செல்லி புரியவைப்பதுடன், 30 வாக்காளர்களுக்கு ஒருவர்  என நியமித்து வாக்காளர்களிடம் அந்த நபர் தொடர்பில் இருக்கும்போது கீழ்மட்ட அளவில் கட்சி கட்டமைப்பு வலுப்படும் என்பதுதான் பண்ணா பிரமுக்  வியூகத்தின் திட்டம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓரளவுக்கு பரவலாக தனது வெற்றியை பாஜக தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள நிலையில் இனிவரும் காலங்களில் பாஜக தேசியத் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா போன்றோர் அடிக்கடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்வார்கள் என்றும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து வட இந்தியாவில் செய்யப்படுவது போல பண்ணா பிரமுக் வியூகத்தை பாஜக தலைவர்கள் முன்னெடுக்க உள்ளார்கள் என்றும், டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். 
வெஸ்ட் பெங்கால் மாடல், திரிபுரா மாடல் என்று சொல்லப்படுவதற்கு அடிப்படையாக இருந்ததே பன்னா பிரமுக்தான் என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலூன்ற பாஜக பல ஆண்டுகளாக முயன்று வரும் நிலையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனித்துப் போட்டியிட்டு பாஜக சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் 19 வார்டுகளில் அதிமுக அவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 2வது இடத்திற்கு அதிமுக முன்னேறியுள்ளது.  

இது பாஜகவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகவே கருதப்படுகிறது. இது அதிமுகவின் வெற்றிடத்தை பாஜக கைப்பற்றி விட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 309 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் அதிகம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 11 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

சென்னையில் 8.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பாஜக, இன்னும் கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தால் இன்னும் கூடுதல் வெற்றிகளை பெற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது பாஜகவின் இந்த வெற்றி பாஜக தலைமைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் முழுக்கமுழுக்க தமிழகத்தை குறிவைத்து களமிறங்குவார்கள்  என கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இனி பாஜக தேசியத் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா பொன்றோர் அடிக்கடி தமிழகம் வர வாய்ப்பு இருக்கிறது என்றும், டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். மேலும் வட இந்தியாவில் தேர்தலை அணுகுவதைபோல பாஜக தமிழகத்திற்கும் வியூகம் அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், பல ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளின் வசமிருந்த மேற்குவங்கம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட வியூகம் தான்  பன்னா பிரமுக் வியூகம் அந்த வியூகத்தை தமிழகத்திலும் பயன்படுத்த பாஜக தலைமையில் திட்டமிட்டு வருகிறது என கூறியுள்ளார்.

பன்னா பிரமுக் என்றால் என்ன...?

பன்னா என்றால் பக்கம் அதாவது வாக்காளர் பட்டியலில் ஒரு பக்கம், அதற்கான பாஜக  பன்னா பிரமுகரை உருவாக்குகிறது.  ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பன்னா பிரமுகர் (தொண்டர்) இருப்பார் ஒரு பக்கத்தில் சுமார் 30 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன என்றால், அந்த பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை தொடர்புகொள்வது பன்னா பிரமுகரின் பிரதான பொறுப்பாகும். அந்த 30 வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்வதை பன்னா பிரமுகர் உறுதி செய்ய வேண்டும். தங்கள் கட்சிக்கு வாக்களிக்க 30 வாக்காளர்களையும் சந்தித்து பேசுவது, அவர்களைத் தொடர்பு கொண்டு பாஜக தரப்பில் செய்யப்பட்ட மக்கள் நல திட்டங்களை எடுத்துக் கூறுவது, பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்துவது போன்றவை பன்னா பிரமுகரின் பொறுப்பாகும்.

அதேபோல் வாக்குப்பதிவு நாளன்று தங்கள் பொறுப்பில்  உள்ள  வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்றார்களா? என்பதை பன்னா பிரமுகர்கள் உறுதி செய்வர். வாக்குப்பதிவு நாளன்று காலை முதலே வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என கூறி வாக்காளர்களை நேரடியாக அழைப்பது அல்லது வேறு ஊடகத்தின் மூலமாக நினைவூட்டுவது பன்னா பிரமுகர்களின் வேலை, அதேபோல் எத்தனை பேர் வாக்களிக்க சென்றனர் என்ற பட்டியலை பன்னா பிரமுகர்கள் தயாரித்து கட்சிக்கு வழக்குவர்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாக்காளர்களையும் பாஜக நேரடியாக சென்று சேர முடியும் என்பதை இத்திட்டத்தின் முயற்சியாகும். இதன் மூலம் தங்களுக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என பாஜக நம்புகிறது. தங்கள் காட்சி குறித்து ஒவ்வொருவருக்கும் எடுத்து செல்லி புரியவைப்பதுடன், 30 வாக்காளர்களுக்கு ஒருவர்  என நியமித்து வாக்காளர்களிடம் அந்த நபர் தொடர்பில் இருக்கும்போது கீழ்மட்ட அளவில் கட்சி கட்டமைப்பு வலுப்படும் என்பதுதான் பண்ணா பிரமுக் வியூகத்தின் திட்டம்.

கடந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பன்னா பிரமுகர்கள் பட்டியலை உருவாக்கிய போது அப்போதைய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா ஒரு பூத்துக்கு பன்னா பிரமுகராக சேர்க்கப்பட்டார். நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு பன்னா பிரமுகராக பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

பாஜக பல மாநிலங்களில் கால் பதிக்க இந்த திட்டம் பேருதவியாக இருந்துள்ளது என்பதை நிதர்சனமாக உண்மை. இந்த வியூகத்தை பாஜக தலைவர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுத்த உள்ளனர் என டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!