பாஜக இளைஞரணி பள்ளிகளுக்கு உதவி!

Published : Nov 04, 2018, 04:55 PM ISTUpdated : Nov 04, 2018, 05:31 PM IST
பாஜக இளைஞரணி பள்ளிகளுக்கு உதவி!

சுருக்கம்

பாஜக மாநில இளைஞரணி சார்பில் எங்க இந்தியா என்ற அமைப்பின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

பாஜக மாநில இளைஞரணி சார்பில் எங்க இந்தியா என்ற அமைப்பின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அமைப்பின் மூலம் 200 இளம் பேச்சாளர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கடவூர் ஒன்றியம் வரவணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாஜக  இளைஞரணியை சேர்ந்தவர்கள் தத்தெடுத்து ரூ.48 ஆயிரம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டிக்கொடுத்துள்ளனர். மேலும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தயாராக உள்ளதாக பாஜக இளைஞரணியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து மாநில இளைஞரணி செயற்குழு புறுப்பினர் பாண்டியராஜன் கூறுகையில்... "தமிழகத்தில் மோடியின் உத்தரவினால் 1 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அரசு பள்ளிகளுக்கு 50 நூலகங்கள் அமைக்கப்படுகிறது.  

இதுவரை 25 அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரம் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை அதனை கட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கப்படும். பாஜகவால் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!