பாஜக போட்ட சபதம்..! “கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஜெயிக்க விடவே கூடாது.!”

Published : Feb 11, 2022, 03:25 PM IST
பாஜக போட்ட சபதம்..! “கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஜெயிக்க விடவே கூடாது.!”

சுருக்கம்

‘எப்பாடு பட்டாவது பல இடங்களில் அ.தி.மு.க.வை விட நாம் அதிக வாக்குகள் வாங்கியாக வேண்டும்’

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், ஒரே கூட்டணியில் பிணைந்து நின்ற அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தங்களின் பொது எதிரியாக சுட்டிக்காட்டி விமர்சித்தது தி.மு.க.வைதான். ‘முதல்வராகும் கனவில் இருக்கிறார் ஸ்டாலின். அது நிறைவேற விடாமல் முறியடிப்பதே எங்களின் நோக்கம்’ என்று இணைந்த கைகளாய் நின்று பஞ்ச் பேசினர். ஆனால், மக்களின் அமோக ஆதரவில் முரட்டு மெஜாரிட்டியில் வந்து ஆட்சியில் அமர்ந்துள்ளது தி.மு.க.

இந்நிலையில், இதோ இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உடைந்து, தனித்தனியே நிற்கிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும். கூட்டணியை விட்டு பிரிகையில் பா.ஜ.க.வோ ‘உள்ளாட்சி தேர்தலில்தான் பிரிந்து நிற்கிறோம். ஆனால் தேசிய அளவில் எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இணைந்தே எதிர்கொள்வோம்’ என்றது. பா.ஜ.க. வெளியேறிய சந்தோஷத்தில் துவக்கத்தில் ‘அ.தி.மு.க. ஒரு ஆலமரம். இதன் கீழே நின்று பயனடைந்தோர் ஏராளம்’ என்று மறைமுகமாக தாமரையை உரசினர் அ.தி.மு.க.வினர்.

ஆனால் பா.ஜ.க.வோ அ.தி.மு.க. மீது கொல காண்டில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூட்டணியாய் நின்றிருந்தால் தமிழகம் முழுக்க ஆங்காங்கே சில வெற்றிகள், பல இடங்களில் கெளரவமான தோல்விகள் என்று இந்த உள்ளாட்சி தேர்தலை கடந்து போயிருக்கலாம். ஆனால் மிக மிக மோசமான எண்ணிக்கையில் சீட் ஒதுக்கிக் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ள சொல்லி நெருக்கடி தந்து, மிக அலட்சியமாக தங்களைக் கூட்டணியிலிருந்து வெளியே தள்ளிய அ.தி.மு.க.வை மன்னிக்க தயாராக இல்லை அண்ணாமலை டீம் என்கிறார்கள் கமலாலயத்தினர்.

அதனால், ஒன்பது மாதங்களுக்கு முன்பு தங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பொது எதிரியாக இருந்த தி.மு.க.வை இப்போதைக்கு ஓரம் தள்ளி வைத்துவிட்டனர். அந்த இடத்தில் அ.தி.மு.க.வை கொண்டு வந்து வைத்துள்ளவர்கள், ‘எப்பாடு பட்டாவது பல இடங்களில் அ.தி.மு.க.வை விட நாம் அதிக வாக்குகள் வாங்கியாக வேண்டும். நாம் தோற்றாலும் பரவாயில்ல ஆனால் அ.தி.மு.க.வை ஜெயிக்க விட கூடாது. குறிப்பா கொங்கு மண்டலத்துல் அவங்களை குமுற குமுற தோற்கடிக்கணும். தி.மு.க. ஜெயிச்சாலும் சோகமில்லை ஆனால் இவங்க ஜெயிக்கவே கூடாது. நம்மை கேவலமாக நினைத்த எடப்பாடியார் தரப்புக்கு நாம வைக்கபோகும் வேட்டு இதுதான்.” என்று நெத்தியடியாக சவால் விட்டு இறங்கியுள்ளனர் களத்தில்.

இதை முழுமையாக ஸ்மெல் செய்துவிட்ட அ.தி.மு.க.வோ அதிர்ச்சி பாதி, ஆத்திரம் மீதியாக பிரசாரத்தில் பிஸியாக இருந்து பா.ஜ.க.வை முறியடிக்கப் பார்க்கிறது.

தாமரையை இலை மூடுமா? இல்ல இலையை தாமரை முழுங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!