போங்கு ஆட்டமா ஆடுரீங்க!!  வாக்கு சீட்டு முறையில் உங்களால தேர்தல சந்திக்க முடியுமா ? ஏமாற்றிதானே ஜெயிக்கிறீங்க…பாஜகவை வெளுத்து வாங்கும் சிவசேனா !!

First Published May 15, 2018, 9:25 PM IST
Highlights
BJP win by EVM machine sivasena blame


வாக்குசீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா என பாஜகவிற்கு சவால்  விட்டுள்ள கூட்டணி கட்சியான சிவசேனா, கர்நாடகாவில் பாஜக பெற்றது வெற்றியே கிடையாது என தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றினாலும், அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதே நேரத்தில் பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்துதான் ஜெயித்து வருகிறது என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறித்து, பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

இது தொடர்பாக சிவசேனா, கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசும் போது  இடைத்தேர்தல்களில்  தோல்வி அடையும் பாஜக பொதுச் தேர்தல்களில் எப்படி ஜெயிக்கிறது  என கேள்வி எழுப்பினார். 

பாஜக தன்மீது நம்பிக்கையிருந்தால் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். அதிகமான மக்கள் இதற்கான கோரிக்கையை விடுத்து வருகிறார்கள், அதன் மூலமாகவே வாக்குப்பதிவு இயந்திர சந்தேகத்தை தெளிவு செய்ய முடியும் என கூறிஉள்ளார். 

தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்ரே, சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறலாம், சில நேரங்களில் நீங்கள் தோல்வியடையாலாம், ஆனால் தொடர்ந்து நம்முடைய பணியை சிறப்பாக செயய் வேண்டும் என ராகுல் காந்திக்கு அட்வைஸ் வழங்கி உள்ளார்   

இதே போன்று கர்நாடக தேர்தலில் பாஜக பெற்றது வெற்றியே  கிடையாது என்றும்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெற்றி எனவும் நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விமர்சனம் செய்து உள்ளார்

click me!