
கர்நாடக தேர்தல் முடிவுகள் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில். கேரள சுற்றுலாத்துறை தற்போது ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறது.
இந்த டிவிட்டர் பதிவில் ”மிகக்கடுமையாகவும் பரபரப்பாகவும் நடந்திருக்கும் கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அனைத்து கர்நாடக எம்.எல்.ஏக்களும் கடவுளின் சொந்த நாடான கேரளாவிற்கு வரவேண்டும். வந்து அங்கிருக்கும், அழகான, பாதுகாப்பான ரிசார்ட்டுகளில் இளைப்பாற வேண்டும்” என அழைப்பு விடுத்திருக்கிறது கேரள சுற்றுலாத்துறை
கர்நாடகாவில் பா.ஜா.க முன்னணியில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த முறை ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி காங்கிரஸ் கைக்கு போகலாம் என சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் கேரள சுற்றுலாத்துறை விடுத்திருக்கும் இந்த அழைப்பை எம்.எல்.ஏக்கள் கண்டு கொள்வார்களா என தெரியவில்லை. பிரச்சனை எல்லாம் முடிந்து ஆட்சி அமைத்த பிறகு வேண்டுமானால், கடவுளின் சொந்த நாட்டை நோக்கி, கர்நாடக எம்.எல்.ஏக்களின் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கிறது.