பாஜகவை துரத்தியே ஆக வேண்டும் !! மம்தா பானர்ஜி ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published Dec 31, 2019, 8:25 AM IST
Highlights


பாஜகவை  தனிமைப்படுத்தவும் அக்கட்சியைத் துரத்தி அடிக்கவும் அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

.மேற்கு வங்க மாநிலம் புரூலியா நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. இதில் மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான ஜார்கண்டில் பாஜக ஆட்சியை விலக்கியது போல், பாஜகவை விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அண்மையில் குடியுரிமை வரிசையில் பாஜக  மற்றும் கட்சியின் நகர்வைக் குறைத்து, 'முதல் வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில்' அவர்களை விரட்டியடிக்கும் பணியை மக்கள் செய்ய வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்..

இந்துக்களைப் பாதுகாப்பது பற்றி பாஜக பேசுகிறது, ஆனால் அசாமில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் என்.ஆர்.சி.,யிலிருந்து விலக்கப்பட்டனர். 

18 வயது மாணவர் ஒருவர் வாக்களிக்க முடியும், ஆனால் ஒரு போராட்டத்தை நடத்த முடியாது என்று பாஜக கூறுகிறது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன். நான் உயிருடன் இருக்கும்வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று மம்தா ஆவேசமாக பேசினார்.

click me!