அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது !! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு !

By Selvanayagam PFirst Published May 19, 2019, 6:55 PM IST
Highlights

17 ஆவது மக்களைவைக்கு  கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து பிரபல சேனல்கள் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளன.
 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும்,  ஆனால் பாஜக சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இன்று சரியாக 6.30 மணிக்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டைம்ஸ் நௌ  வெளியிட்டுள்ள முடிவுகளில் பாஜக கூட்டணி 306 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களையும், மாநில கட்சிகள் 104 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ரிபப்ளிக் ஜன்பத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 287 பாஜக, 128 காங்கிரஸ் மற்றும் 127 மாநிலக்கட்சிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஓட்டர்ஸ் வெளியிட்டுள்ள முடிகளின்படி  பாஜக 298 இடங்களையும், காங்கிரஸ் 118 இடங்களையும், மாநில கட்சிகள் 126 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!