கூட்டணி வச்சாலும் தேறாது காங்கிரஸ்.... ராகுல் கனவில் மண்ணை வாரிபோட்ட எக்ஸிட் போல் ரிசல்ட்!!

By sathish kFirst Published May 19, 2019, 6:49 PM IST
Highlights

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று தான் கிளைமேக்ஸ். ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்து சற்று நேரமே ஆன நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் எக்ஸிட் போல்  ரிசல்ட் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 11 முதல் மே இன்று மாலை 6.30 மணிவரை எக்ஸிட் போல் ஊடகங்கள் வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று 7-வது கட்ட வாக்குப் பதிவு இன்று 59 தொகுதிகளில் நடந்தது, இன்று வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் சற்று முன்பு எக்ஸிட் போல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் எக்ஸிட் போல் வெளியிட்டு இருந்தன. அதேபோல எக்ஸிட் போல் கணிப்புதான் அடுத்தடுத்த நாட்களுக்கு பின் இதே பேச்சாகத்தான் இருக்கும். வரும் மே 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் துல்லியமாகவே இருக்கும், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது சில எக்ஸிட் போல் முடிவுகள், நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறியிருந்ததால் அதேபோல இந்த முறையும் எக்ஸிட் போல் ரிசல்ட்டை எதிர் பார்த்திருந்தனர்.

சற்றுமுன் வெளியான இந்த எக்ஸிட் போல் ரிசல்டில், Republic TV  - CVoter பிஜேபி 287 தொகுதிகளும், காங்கிரஸ் 128 தொகுதிகளும், SP BSP - 40 தொகுதிகளும், மற்ற கட்சிகள் 87 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கூறியுள்ளது.

Times Now - VMR - பிஜேபி கூட்டணி 306 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணியில் 132 தொகுதிகளும், மற்றவை 104 தொகுதிகள் என பிஜேபி கூட்டணியே இதிலும் முன்னணியில் உள்ளது.

Republic Bharat - Jan Ki Baat  பிஜேபி கூட்டணி 305 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 124 தொகுதிகளும் SP+BSP 26 தொகுதிகளும் மற்றவை 87 தொகுதிகளில் வெல்லும் என இந்த கணிப்பிலும் பிஜேபியே முன்னிலை வகிக்கிறது.

ஆக எப்படி கூட்டி கழித்தாலும், மொத்தமாக சேர்ந்து கூட்டணி போட்டாலும் காங்கிரஸ் கரையேறது என எக்ஸிட் போல் ரிசல்டில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

click me!