அடிதூள்..! வெளியானது எக்ஸிட் போல்.. 306 தொகுதிகளில் பிஜேபி ..! எதிர்க்கட்சிகளுக்கு மரண அடியா..?

By ezhil mozhiFirst Published May 19, 2019, 6:50 PM IST
Highlights

2019 நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறப்போவது மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போவது என உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது.
 
அடிதூள்..! வெளியானது எக்ஸிட் போல்.. 306 தொகுதிகளில் பிஜேபி ..! எதிர்க்கட்சிகளுக்கு மரண அடியா..?   

2019 நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறப்போவது மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போவது என உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது.

தற்போது எக்ஸிட் போல் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் முன்கூட்டியே எக்ஸிட் போல் மூலமாக அதிக இடங்களைப் பிடித்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்பு மூலமாகவே தெரிந்து கொள்ளமுடியும்.

அதன்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 306 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் என என்டிடிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் வெளியாகி ஒரு பரபரப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 142 இடங்களிலும், எதிர்கட்சிகள் 94 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என தற்போதைய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இதிலிருந்து, பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை   உணர வைக்கின்றது. 

click me!