”பப்ளிசிட்டி தேடுகிறார் பிரகாஷ்ராஜ்” - வானதி ஸ்ரீனிவாசன் தாக்கு...

First Published Oct 2, 2017, 7:13 PM IST
Highlights
bjp vanathi srinivasan condemned to actor prakashraj


தகுதி இல்லையென்று நினைத்தால் தேசிய விருதுகளை திருப்பி தரலாம் எனவும் கடந்த 6 மாதத்தில் மட்டும் நடிகரகள் அரசியல் பேசுவது ஏன் எனவும் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் கௌரி லங்கேஷ். இவர் தீவிர இடது சாரி சிந்தனையாளர். மேலும், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை தீவிரமாக துணிச்சலாக எதிர்த்ததோடு மட்டுமின்றி பத்திரிக்கைக்கைகளிலும் எழுதி வந்தார். 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்நிலையில்,  பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பெங்களூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார். 

அப்போது, கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும் இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார். 

இதற்காக தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

இந்நிலையில், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், தகுதி இல்லையென்று நினைத்தால் தேசிய விருதுகளை திருப்பி தரலாம் எனவும் கடந்த 6 மாதத்தில் மட்டும் நடிகரகள் அரசியல் பேசுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

தன்னை பிரபல படுத்தி கொள்ளவே பிரகாஷ்ராஜ் அவ்வாறு தெரிவித்துள்ளாதாகவும் குற்றம் சாட்டினார். 

click me!