முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை ஊழல் அமைச்சரவையாக உள்ளது - அண்ணாமலை விமர்சனம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 11:35 AM IST

ஊழல் அமைச்சரவையாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை உள்ளது. திமுக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளதாக நத்தத்தில் பாஜக மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை பேசினார்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பள்ளபட்டி விலக்கு பகுதியில் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, நத்தம் பேருந்துநிலையம் அருகே பேசியதாவது, தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி தந்தபோது திண்டுக்கல்லுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி தந்தவர் பிரதமர். மதுரை-நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலத்தை தந்துள்ளார் பிரதமர் மோடி.

ஆண்டிஅம்பலம் தொடர்ந்து எம்.எல்.ஏ., வாக இருந்துள்ளார். கார்வேந்தன் எம்.பி., இரண்டு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். திமுக அரசு தமிழக மக்களுக்காக உழைக்கவில்லை. ஏழை மக்களுக்காக உழைக்கவில்லை. அவரது குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே உள்ளார். எந்த பிரச்சினைக்கும் திமுக அரசு தீர்வு காண்பதில்லை. தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதை விட சந்திசிரிக்கிறது என்பது தான் சரியான வார்த்தை. காவல்துறையினர் கையை கட்டிப்போட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம்; பொதுமக்களின் வசதிக்காக 1250 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு

தென்தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் 41 கொலை நடந்துள்ளது. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் சாராயத்தை பெருக்கியுள்ளார். டாஸ்மாக் கடையை நிறுத்தச்சொல்லி எனக்கு மனு கொடுக்கின்றனர். மதுபான விற்பனையால் 44 ஆயிரம் கோடி ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. மதுவிற்று தான் அரசை நடத்தவேண்டும் என்ற நிலை இல்லை. திமுகவின் தலைவர்களின் சாராய ஆலைக்காக டாஸ்மாக் தேவைப்படுகிறது.

40 சதவீத மதுபானங்கள் திமுக தலைவர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரின்  கம்பெனிகளிடம் இருந்து வருகிறது. மதுக்கடையை மூடிவிட்டு, கள்ளுக்கடையை திறக்கவேண்டும் என்கிறோம். குடிப்பது மக்கள் விருப்பம். ஆனால் எரிசாராயத்தை கொண்டு மக்களை குடிக்கவைத்து உயிரை பார்க்கின்றனர். தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்றார். இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 

ஒவ்வொருவர் மீதும் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. கடன்கார மாநிலமாக தமிழகம் உள்ளது.  ஊழல் அமைச்சரவையாக  முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை உள்ளது. திமுக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். 2014 பிறகு தான் மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களின் வீடு தேடி வந்தது. வீடு, கழிப்பறை, சிலிண்டர் வழங்கப்பட்டது. வங்கி கணக்கு துவக்கப்பட்டது.

எல்லா பக்கமும் அணை கட்டுனா எங்கடா போவேன்; போக வழி இல்லாமல் சாலையில் திக்கு முக்காடிய சிறுத்தை

2024 தேர்தலில் பிரதமர் நரேந்திமோடியின் கரத்தை வலுப்படுத்தி தமிழகத்தில் 39 க்கு 39 தொகுதியில் வென்று 400 எம்.பி.,களுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியில் அமரவைக்கவேண்டும். 2024 திமுக கட்சி அழிவின் துவக்கமாக இருக்க வேண்டும். 2026ல் திமுக முற்றிலும் அழிக்கப்படவேண்டும். உதயநிதி சனாதனத்தை அழிக்க புறப்பட்டுள்ளார். 

டெங்கு, மலேரியா கொசுவை ஒழிப்பது போல் ஒழிக்கவேண்டும் என்கிறார். டி என்றால் டெங்கு, எம் என்றால் மலேரியா கே என்றால் கொசு. டெங்கு, மலேரியா கொசுக்களை ஒழிக்கவேண்டும் என்றால் முதலில் டிஎம்கே வை ஒழிக்கவேண்டும். பொய்யை சொல்லி வாக்குவாங்கியது திமுக. 2.5 கோடி குடும்பத்தலைவிகள் உள்ள நிலையில் ஒரு கோடிப்பேருக்கு மட்டுமே வழங்குகின்றனர். 

நத்தத்திற்கென கலைக்கல்லூரி கொண்டுவருவோம்,  மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவருவோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைபார்க்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. குடும்ப ஆட்சியை அனுமதிக்காதீர்கள். அது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழி. 2024 ல் குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்டவேண்டும். இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லும் பிரதமரை ஊக்கப்படுத்த நீங்கள் 2024 ல் பிரதமர் மோடியை ஆதரிக்கவேண்டும், என்றார்.

click me!