பெட்ரோல் விலையை ரூ.36-ஆக குறைக்கத் தயார்….! பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!

By manimegalai aFirst Published Oct 1, 2021, 9:58 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலையிடம் முதியவர் ஒருவர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது குறித்து கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலையிடம் முதியவர் ஒருவர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது குறித்து கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. ஊராட்சி தலைவர் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து வாக்குறுதி அளித்த நிலை மாறி தேசியக் கட்சிகள் இறங்கிவந்து வாக்குறுதிகளை அள்ளிவீசும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

விக்கிரவாண்டி அடுத்த அன்னியூரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பாடுபடக் கூடிய தலைவர்கள் கிடைக்க பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை மத்திய அரசு 36 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு ரூ.2-க்கு வழங்குவதாக கூறிய அண்ணாமலை ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 மாணியம் வழங்கும் மோடி அரசை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

பரப்புரை முடிந்ததும் அண்ணாமலை அருகில் சென்ற முதியவர் ஒருவர், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மீண்டும் மைக்கை வங்கிய அண்ணாமலை பெட்ரோல் விலையை 36 ரூபாயாக குறைக்க தயார் என்று கூறினார். பெட்ரோல் விலையைக் குறைக்க பிரதமர் மோடியும் தயாராக இருப்பதாகவும் ஆனால் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

click me!