பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிடுச்சு! கேவலம் ஓட்டுக்காக வேடிக்கை பார்க்கிறார்கள்!: முதல்வரின் பல்ஸை எகிற வைத்த மோடியின் பிரதிநிதி!

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 3:51 PM IST
Highlights

பயங்கரவாதிகளால் எஸ்.ஐ. சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கவில்லை. அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. முஸ்லிம்கள் ஓட்டுக்காகத்தான் அவ்வாறு இருந்தன. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழக மாறிவிட்டது. -பொன்.ராதாகிருஷ்ணன். 
:


*ஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத்தீயினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்று இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான பறவைகளும், பல லட்சம் கோடி பூச்சிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா கரடிகளின் மொத்த  எண்ணிக்கையில், 30% கருகி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. 
-பத்திரிக்கை செய்தி. 

*தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! என மத்தியரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதன் மற்றொரு வடிவமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளனர். இந்த திட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின் தொடக்கமாக உள்ளது. இதனால், பல இந்தியர்கள், சந்தேகத்துக்குரிய குடிமகனாக மாற்றப்படுவர்! எனவே இதை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என ஸ்டாலினிடம் நாங்கள் வலியுறுத்தினோம். - முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள். 

*சிலகாலமாக ‘இந்து’ என்ற சொல்லே, சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அத்தகைய கருத்தை கொண்டிருக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அவர்களின் நிலைப்பாட்டை நியாயம் என ஏற்க முடியாது. இந்து சமயத்தில் பலவித கலாசாரம் கொண்ட மக்களுக்காக பல எண்ணிக்கையிலான தெய்வங்கங்கள் இருக்கின்றன. இதில் புதிதாக ஒரு தெய்வத்தை கூடுதலாக இணைப்பதென்றாலும் மகிழ்வுடன் இணைத்து வணங்குகிறோம். -வெங்கய்யா நாயுடு (துணை ஜனாதிபதி)

*தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உத்தவின்படி டில்லி ஜே.என். பல்கலைக்கழகத்துக்கு சென்று, தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தாக்கப்பட்ட மாணவர்களை அப்பல்கலையின் துணைவேந்தர் சந்தித்து ஆறுதல் கூறாமலிருப்பது பெரும் வேதனையாக இருக்கிறது. -உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க. இளைஞரணி செயலாளர்)

*கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஆலோசித்து நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்துக் கட்சியினர் தங்களின் சொந்தக் கருத்துக்களை பொதுவெளியில் ஒரு போதும் தெரிவிக்க வேண்டாம். 
- இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். கூட்டறிக்கை. 

*தூத்துக்குடி சக்தி வாய்ந்த மண். இங்கு நிறுவப்படும் எதுவும் தோல்வியடையாது. தரை, கடல், வான், ரயில் என நான்கு வகையான போக்குவரத்தை கொண்ட நகரம் இது. இந்த நகரின் வளர்ச்சியில் என் பங்கு நிச்சயம் இருக்கும். 
-தமிழிசை சவுந்தர்ராஜன் (தெலுங்கானா ஆளுநர்)

*தமிழகத்தில் எங்களின் தற்போதைய கூட்டணி தொடரும். சட்டசபை  தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும். கூட்டணியை மேலும் வலுவடையச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 
-முரளிதர ராவ் (தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர்)

*இலங்கை தமிழர்கள், தாய்மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பர். ஆனால் அவர்களிடம் இப்போது புத்தகவாசிப்பு பழக்கமானது குறைந்துவிட்டது. போதாக்குறைக்கு, தமிழறிஞர்களும் அங்கு இப்போது இல்லை. எனவே தமிழை அங்கு வளர்த்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. -சரவணன் (யாழ்ப்பாண தமிழக தேசிய கூட்டமைப்பு எம்.பி.)

 

*தமிழக பா.ஜ.க.  தலைவர் தேர்வுக்கான பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மாநில பாரதிய ஜனதாவின் தலைவர் எனும் பதவி எனக்கு கிடைத்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். நீண்ட நாட்களாக கேட்கும் கோஷமான ‘தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும்’ என்பதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
-எஸ்.வி.சேகர் (பா.ஜ.க. பிரமுகர்)

 

*பயங்கரவாதிகளால் எஸ்.ஐ. சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கவில்லை. அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. முஸ்லிம்கள் ஓட்டுக்காகத்தான் அவ்வாறு இருந்தன. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழக மாறிவிட்டது. 
-பொன்.ராதாகிருஷ்ணன். 

 

-விஷ்ணுப்ரியா

click me!