பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திடீர் கைது... என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!

By vinoth kumarFirst Published May 19, 2022, 7:14 AM IST
Highlights

பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.

போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சியை நடந்த சென்ற எச்.ராஜா கைது செய்யப்பட்டார். 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிலையில், பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை. நிகழ்ச்சி இரவு நேரம் நடத்தப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை என கூறி அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும், பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு (30)2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாக கூறிய காவல் துறையினர் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், காவல்துறையின் உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அந்த இடத்துக்கு விரைந்திருக்கிறார்.

இதையடுத்து, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து போலீசார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்தனர். ஆனால் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்ட எச்.ராஜா சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  இந்த நிகழ்ச்சிக்கு என்னை செல்ல விடாமல் தடுத்து திண்டுக்கல் எஸ்.பி. என்னை கைது செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு என்னை செல்ல விடாமல் தடுத்து திண்டுக்கல் எஸ் பி என்னை கைது செய்துள்ளார். pic.twitter.com/BadTVE6Iok

— H Raja (@HRajaBJP)

click me!