மறுபடியும் சிறைக்கு செல்லாமல் பாத்துக்கோங்க... முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அற்புதம்மாள் கோரிக்கை!!

By Narendran SFirst Published May 18, 2022, 9:36 PM IST
Highlights

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு கொண்டதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு கொண்டதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதை அடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாறன் மற்றும் அவரது தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை சென்னை வந்தனர்.

அப்போது அரசு முறைப் பயணமாக கோவை செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். அதில் பேரறிவாளனின் பெற்றோர் அற்புதம்மாள், குயில்தாசன் மற்றும் பேரறிவாளனின் உடன் பிறந்த தங்கை மற்றும் அக்கா குடும்பத்தினர் என ஒட்டு மொத்த குடும்பமும்  20 நிமிடத்திற்கு மேலாக முதல்வரை சந்தித்து பேசினர். பேரறிவாளன் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை முதல்வருடன் பகிர்ந்துகொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள், முதல்வருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது.

குடும்பத்தினர் பற்றியும் கேட்டறிந்தார். மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்தோம். இது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீண்ட நெடிய என் போராட்டத்திற்காக முதல்வர் என்னை பார்த்த உடன் முதலில் அற்புதம்மாளுக்கு தான் சால்வை போர்த்த வேண்டும் என தெரிவித்ததாக கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அற்புதம்மாள், பேரறிவாளன் சிறையில் 31 ஆண்டு இருந்தார், மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள் என நான் முதல்வரிடம் கேட்டேன். முதல்வரும் பதிலுக்கு, அதையே எண்ணுவதாக என்னிடம் கூறினார். மேலும் அவருக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகள் வழங்கும்படி முதல்வரிடம் கேட்டு கொண்டேன் என்று தெரிவித்தார். 

click me!