விஜயகாந்த் ரூட்டெடுக்கும் விஜய்… வெள்ளை சட்டையில் சென்று சந்திரசேகர ராவுடன் சந்திப்பு!!

Published : May 18, 2022, 08:54 PM ISTUpdated : May 18, 2022, 09:02 PM IST
விஜயகாந்த் ரூட்டெடுக்கும் விஜய்… வெள்ளை சட்டையில் சென்று சந்திரசேகர ராவுடன் சந்திப்பு!!

சுருக்கம்

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நடிப்பு ஒருப்பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியலிலும் அவ்வப்போது தலையை காட்டுகிறார் விஜய். சில காலமாகவே விஜய் தன்னுடைய பட பாடல் வெளியீட்டு விழாவின்போது குட்டி கதை சொல்வது, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது என்று ரசிகர்களை பரபரப்பாக்கி வருகிறார். பீஸ்ட் படம் வெளியானதை அடுத்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு தயராகி வருகிறார். ஏற்கனவே தளபதி 66 திரைப்படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் உட்சத்தில் இருக்கும் அவர் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  தளபதி 66 படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். சந்திரசேகர ராவின் மருமகன் சந்தோஷ் குமார் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் நேரில் சந்தித்தார். அதேபோல் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தது. பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும் சில இடங்களில் 3, 4 ஆம் இடங்களை பிடித்தது. இதனிடையே நடிகர் விஜய் அண்மை காலமாக பாஜகவை ஆதாரிக்காத தலைவர்களை சந்தித்து வருகிறார். ரங்கசாமி, மு.க.ஸ்டாலின், தற்போது சந்திரசேகர ராவ் ஆகிய பாஜகவை ஆதரிக்காத தலைவர்களை நடிகர் விஜய் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். பல்வேறு மாநில முதலமைச்சர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி