குடும்ப ஆட்சியால் வந்த நிலை.. திமுக இதை செய்யுமா? திமுகவை விளாசிய சசிகலா புஷ்பா!

By Raghupati RFirst Published Jun 26, 2022, 5:52 PM IST
Highlights

BJP : ‘பாஜகவை பொறுத்தவரை குடும்ப ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அதனை எதிர்க்கிறது’ என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கூறினார்.

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய போது, ‘நமது நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்திய நாளான ஜூன் 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாட்டில் எந்தவித போர் ஏற்பட்டதில்லை, உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. 

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனால் இந்த அவசர நிலை பிரகடனப் படுத்தப்படவில்லை. மாறாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது குடும்பத்திற்கு நலனுக்காக அவசர நிலையை கொண்டு வந்தார். இதன் காரணமாக அன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எனவே குடும்ப ஆட்சியால் என்ன நிலை ஏற்படும் என்பதை நாங்கள் ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி வருகிறோம். பாஜகவை பொறுத்தவரை குடும்ப ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

கர்மவீரர் காமராஜர் இறப்புக்கு இந்த அவசர நிலை பிரகடனம் தான் காரணமாக அமைந்தது. திமுகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் பல நிறுவனங்களில் கனிமொழி பங்குதாரராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி நாட்டின் நலனுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பாஜக ஆட்சியில் ராணுவத்தில் அதிக புரட்சி ஏற்பட்டுள்ளது. சீனா நாட்டின் எல்லையை கூட நாம் தான் கையகப்படுத்தி இருக்கிறோம். 

கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக ஏன் நீரை சேமிக்க ஒரு அணை கூட கட்டவில்லை ? நீர்நிலைகளை பாதுகாக்க முடியவில்லை. மத்திய அரசு ஜிஎஸ்டி, டிஜிட்டல் மயம் போன்றவற்றை கொண்டு வந்ததன் காரணமாக நாட்டில் ஊழல் குறைந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

click me!