அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி கட்டிலில் அமரும்... அண்ணாமலை ஆரூடம்..!

Published : Sep 16, 2020, 04:56 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி கட்டிலில் அமரும்... அண்ணாமலை ஆரூடம்..!

சுருக்கம்

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர் என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர் என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தை ஏற்கவில்லை. அவர் நல்ல நடிகர் மட்டுமல்லாமல், நல்ல மனிதரும் கூட. நீட் குறித்து சூர்யா மிகவும் கடுமையாக பதிவிட்டிருந்தார். அவரது பார்வை அடுத்த ஆண்டு மாறும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு நீட் தேர்வு கேள்விகள் பெரும்பாலும் நம்முடைய சிலபஸில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமரும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வலுவோடு காலுன்றி நிற்கக்கூடிய கட்சியாக இருக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய அவர் கிசான் திட்ட முறைகேட்டிற்கும் பாஜகவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கான இடம் தமிழகத்தில் உள்ளது. அடிப்படையில் பாஜகவும் ரஜினியும் அரசியலில் ஒருமித்த கருத்து கொண்டது. வரும் காலங்களில் ரஜினியுடனான கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!