பிரதமர் உழவர் நிதி உதவி திட்ட ஊழலுக்கு தமிழக அரசே பொறுப்பு: அதிமுக பாஜக கூட்டணியில் வெடிவைத்த மத்திய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 3:16 PM IST
Highlights

இதற்கு பதில் அளித்த  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் உழவர் உதவி நிதி திட்டத்தில், பெரும் அளவு மேசடிகள் நடைபெற்றுள்ளதை தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு, தமிழக அரசே பொறுப்பு என தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில். அளித்துள்ளார். பாஜக அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் பாஜகவின் இந்த குற்றச்சாட்டு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி நாடாளுமன்றத்தில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் உழவர் உதவி நிதி திட்டத்தில், பெரும் அளவு மேசடிகள் நடைபெற்றுள்ளதை தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து இது வரை 47 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் செர்ந்த 19 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உழவர் உதவி நிதி திட்டத்தை செயல்படுத்து வது மாநில அரசுகளின் பொறுப்பு எனவும், எனவே மத்திய வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ளார்.  எனவே  இந்த ஊழலுக்கு, தமிழக அரசே பொறுப்பு எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

click me!