கொரோனாவை இப்படி ஒரு பட்டியலில் சேர்க்க வேண்டுமா..?? இழப்பீடு கேட்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 3:00 PM IST
Highlights

"கொரோனா நோயை தொழில் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலில் சேர்த்து அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்வதை தொழிற்சங்கங்களின் மூலம் செய்வதற்கும், ஆன்லைன் முறையில் பதிவு செய்வதை எளிதாக்கவும் வேண்டும் என்றார். 

கொரோனா நெருக்கடியால் இடம் பெயறும் தொழிலாளர்களுக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் அரிசி வழங்க வேண்டும் எனவும் , அதேபோல் பணியிடங்களில் அவர்களின் பணிமுறையை ஒழுங்குமுறை படுத்த வேண்டும். எனவும்  அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது பேசிய அவ்வமைப்பின் அகில இந்திய கூடுதல் செயலாளர் இரா.கீதா கூறுகையில், 

"கொரோனா நோயை தொழில் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலில் சேர்த்து அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்வதை தொழிற்சங்கங்களின் மூலம் செய்வதற்கும், ஆன்லைன் முறையில் பதிவு செய்வதை எளிதாக்கவும் வேண்டும் என்றார்.  இடம் பெயறும் தொழிலாளர்கள் நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் அரிசி வழங்க வேண்டும். பணியிடங்களில் பணிமுறையை ஒழுங்குமுறை படுத்த வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் வரைவுச் சட்டம் அமலாக்கப்பட்டால் தொழிலாளர் வாரியங்கள் முடங்கும் அபாயம் உள்ளது என்றார். 

 

எனவே அதனை அமலாக்ககூடாது. அரசு அறிவித்த உதவித்தொகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் ஏற்கவில்லை என்றால் இந்த மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்துள்ளார். 

 

click me!