கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி - முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி - முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்

சுருக்கம்

BJP regime in Goa again - chief minister Parrikar Manohari

மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவாவில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இது தொடர்பாக அவர் 22 எம்எல்ஏக்களுடன் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பாதுகாப்பு அமைச்சர்

கோவாவில் கடந்த 2012-ல் பாஜக வெற்றி பெற்றபோது மாநில முதல் அமைச்சராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2014-ல் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து, மாநில அரசியலில் இருந்த மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மிக முக்கியமான பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பினை மோடி வழங்கினார்.

ெபரும்பான்மை இல்லை

இந்த நிலையில், கோவா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் 21 இடங்களை பிடித்து ஆட்சியில் இருந்த பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 40 இடங்களில் 17 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. குறிப்பாக மாநில முதல் அமைச்சராக இருந்த லட்சுமி காந்த் பர்சேகர் மண்ட்ரேம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அமைச்சர்களும் தோல்வி

மாநில அமைச்சர்கள் 8 பேரில் 6 பேர் தோல்வியை தழுவினர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.) மற்றும் கோவா முன்னணி கட்சி ஆகியவை தலா 3 இடங்களில் வெற்றி பெற்றன.

தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். மற்ற இரு இடங்கள் சுயேச்சைகளுக்கு கிடைத்தது.

மனோகர் பாரிக்கர்

கோவாவில் பாஜக சந்தித்துள்ள தோல்விக்கு மனோகர் பாரிக்கரை மாநில அரசியலில் இருந்து விலக்கியதே காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனோகர் பாரிக்கர் மாநில அரசியலுக்கு திரும்பி, பாஜகவின் மாநில தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று எம்.ஜி.பி. கட்சி அறிவித்திருந்தது.

கட்சியினர் வலியுறுத்தல்

இதேபோன்று கட்சி எம்எல்ஏக்களும், ‘மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகின்றனர். மனோகர் பாரிக்கர் ஆட்சியின் கீழ் கோவா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டது. அவரைப் போன்றதொரு முதல் அமைச்சர் கோவாவிற்கு தேவை.

மனோகர் பாரிக்கர் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை கோவா மக்கள் நன்கு அறிவார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கையில் சிக்கி மாநிலம் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

மாநிலத்தின் நலன் கருதி காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் மனோகர் பாரிக்கர் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று கூறியிருந்தனர்.

அதிரடி திருப்பம்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று மாலை 7.45 மணியளவில் பாஜக எம்எல்ஏக்கள் 13 பேர், எம்.ஜி.பி. கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர், கோவா முன்னணி கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 22 எம்எல்ஏக்களுடன், மனோகர் பாரிக்கர் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தார்.

அப்போது, பெரும்பான்மைக்கு 21 பேர் தேவையுள்ள நிலையில் தங்களிடம் 22 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். அவருடன் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் உடன் சென்றார். அதைத் தொடர்ந்து கோவாவில் பா.ஜனதா ஆட்சி மீண்டும் மலர்வது உறுதியாகிவிட்டது.

பாக்ஸ்

பாஜக மேலிடம் ஒப்புதல்

கோவாவில் மனோகர் பாரிக்கருக்கு உள்ள செல்வாக்கு, சட்டப்பேரவை கட்சி தலைவராக அவர் வரவேண்டும் என்ற எம்எல்ஏக்களின் கோரிக்கை, மக்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை காரணமாக, மனோகர் பாரிக்கர் கோவா சட்டப்பேரவை பாஜக தலைவர் பொறுப்பை ஏற்க பாஜக மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தகவலை பாஜகவின் மாநில தலைவர் வினய் டெண்டுல்கர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?