ஆணவக் கொலைகள் செய்யும் பாஜக, பாமக.. பயங்கரமா பங்கம் செய்த திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 20, 2021, 10:44 AM IST
Highlights

ஆர்எஸ்எஸ் பாஜக  விரித்த வலையில் சிக்கிக்கொண்ட பாமக தொடர்ந்து தலித்துக்களுக்கு எதிராக சாதி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும். பாமகவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது என்றும், பாஜக, ஆர்எஸ்எஸ் மத அரசியலை முன்னெடுப்பது போல, 

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை தாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்த சட்டத்தை ஆணவ கொலைகள் செய்யும் பாஜக பாமக போன்ற பிற்போக்கு சக்திகளும் வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது என விமர்சித்துள்ளார்.  தமிழகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகளுக்கு பாமக தான் காரணம் என்ன குற்றம் சாட்டி வரும் விடுதலை சிறுத்தைகள், தற்போது அந்த பட்டியலில் பாஜகவையும் இணைத்து பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர் எதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக வடமாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே பலம்வாய்ந்த கட்சிகளாக உள்ளன. துவக்க காலத்தில் பாம்பும் கீரியுமாக இருந்த இந்த காட்சிகள். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் இணைந்து செயல்பட தொடங்கின. இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழர் வாழ்வுரிமை என பல்வேறு பிரச்சினைகளில் ராமதாஸும் திருமாவளவனும் இணைந்து செயல்பட்டனர். ஆனால் அந்த நெருக்கம் நீண்ட நாளைக்கு நீடிக்கவில்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வன்னியப் பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றுகின்றனர் என்றும், கூலிங் கிளாஸ், டி ஷர்ட், ஷூ அணிந்து பணக்கார வன்னியப் பெண்களை மயக்கி, அவர்களுடன் தவறாக நடந்துவிட்டு பின்னர் அவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை அபகரிக்கின்றனர் என்றும், இந்த நாடக காதலுக்கு பட்டியலின சமுதாயத்தின் தலைவராக இருப்பவர்தான் காரணம் என்றும் ராமதாஸ் பேச தொடர்கினார். 

அவரின் இந்த திடீர் குற்றச்சாட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையே தீப்பிழம்பாக வெடித்தது. ராமதாஸ் பற்ற வைத்த தீ தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தலித்துகளை நாடக காதல் கும்பல் என ராமதாஸ் விமர்சித்தார். அவர் பயன்படுத்திய வார்த்தை அரசியல் இரு கட்சிக்கும் இடையே மோதலை உருவாக்கியது. தலித்துகளை ஓரங்கட்ட அவர் அனைத்து தலித் அல்லாத அனைத்து சமுதாயத் தலைவர்களையும் ஒன்று திரட்டினார் ராமதாஸ். சாதி வன்மத்துடன் நடந்து கொள்ளும் ராமதாசையும், பாமகவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என திருமாவளவன் முழங்கினார். பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இனி இருக்காது என திருமாவளவன் பகிரங்கமாக அறிவித்தார். இது பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப் பெரும் சறுக்கலாக மாறியது. அன்று முதல் இன்று வரை விடுதலை சிறுத்தைகளும் பாமகவும் நேரெதிர் அரசியலில் பயணித்து வருகின்றன.

இன்று வரையிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே பகை நீறுபூத்த நெருப்பாக  இருந்துவருகிறது. இந்த நிலையில்தான் ஆண்களைப் போலவே பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் என அவர் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு மத்திய அரசின் இந்த  முடிவை மேற்கோள்காட்டி, " இப்போதாவது பெண்கள் தங்களது இணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கலாமா? அல்லது பெற்றோர் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? மீறினால் சாதி ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்குமா? மருத்துவர்களுக்கே வெளிச்சம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை டேக் செய்து டுவிட் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பெரும் விவார பொருளாக மாறியது. இந்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்றும் அதே நேரத்தில் ஆவணக் கொலைகள் செய்யும் பாஜக பாமக போன்ற பிற்போக்கு சக்திகளும் இதை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது. 

என்றும் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:

நாடாளுமன்றத்தில் தேர்தல்கள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ய பட உள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் விதிமுறை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. உள்நோக்கம் கொண்டது. இந்த மாசோதாவை தாக்கல் செய்ய கூடாது. இதற்கு திமுக காங்கிரஸ் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றார். இதேபோல் பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை நாங்கள் வரவேற்பதாகவும்  இது சரியான நிலைப்பாடு. இதை எதிர்த்த  ஆணவ கொலைகளை தூண்டிவிடும் பாஜக பாமக போன்ற  பிற்போக்கு சக்திகளும் இதை வரவேற்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார். தலித்மக்களுக்கு எதிராக நாடக காதல் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து ராமதாஸ்தான் தமிழகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகளுக்கு காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் பாஜகவையும் சேர்த்துள்ளது.

ஆர்எஸ்எஸ் பாஜக  விரித்த வலையில் சிக்கிக்கொண்ட பாமக தொடர்ந்து தலித்துக்களுக்கு எதிராக சாதி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும். பாமகவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது என்றும், பாஜக, ஆர்எஸ்எஸ் மத அரசியலை முன்னெடுப்பது போல, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சார அரசியலை முன்னெடுப்பது போல , ராமதாஸ் தமிழகத்தில் தலித் விரோத அரசியலையும், தலித் வெறுப்பு அரசியலையும் முன்னெடுத்து வருகிறார். மொத்த த்தில் பாஜகவும், பாமகவும் ஒன்றுதான் என்று கூறிவரும் நிலையில், தற்போது அவணக்கொலைகள் செய்யும் கட்சி பாமக என்ற வரிசையில் பாஜகவையும் சேர்த்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!