பாஜக நியமன எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் தரக்கூடாது...! வலியுறுத்தும் முதலமைச்சர்...! 

 
Published : Jan 17, 2018, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பாஜக நியமன எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் தரக்கூடாது...! வலியுறுத்தும் முதலமைச்சர்...! 

சுருக்கம்

BJP nomination does not make salaries for MLAs

பாஜக நியமன எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலக இயக்குநருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏகாப்பொருத்தம் தான் நிலவி வருகிறது. 

இதனிடையே புதுச்சேரி நியமன எம் .எல்.ஏக்களாக பாஜகவை சேர்ந்த 3 பேருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ரகசியமாக பதவி பிரமானம் செய்து வைத்தார். 

ஆனால் சபாநாயகர் இருக்கும்போது ஆளுநர் எப்படி பதவி பிரமானம் செய்து வைக்க முடியும் என கூறி முதலமைச்சரும் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சட்டத்திற்கு உட்பட்டே பதவி பிரமானம் செய்து வைத்ததாக கிரண்பேடி கூறி வருகிறார். மேலும் ஆளுநர் ஆலுவலகத்திலிருந்து நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான கோப்புகள் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த கோப்புகளை திரும்ப அனுப்பிவிட்டார். 

இந்நிலையில்,  பாஜக நியமன எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலக இயக்குநருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர், உயர்நீதிமன்றம் மட்டுமே முடிவு எடுக்கமுடிவும் எனவும்  நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!