அடுத்த சட்டசபையில் பிஜேபி எம்எல்ஏக்கள் அதிகம் இடம் பெறுவார்கள்..! ஊர் முழுசும் முழங்கும் பாஜக தலைவர் முருகன்

Published : Oct 13, 2020, 10:42 PM IST
அடுத்த சட்டசபையில் பிஜேபி எம்எல்ஏக்கள் அதிகம் இடம் பெறுவார்கள்..! ஊர் முழுசும் முழங்கும் பாஜக தலைவர் முருகன்

சுருக்கம்

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அதிகபடியான எம்எல்ஏக்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள் என அதிரடியாக முழங்கி வருகிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன்.  

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அதிகபடியான எம்எல்ஏக்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள் என அதிரடியாக முழங்கி வருகிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பிஜேபியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்.., “அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம் அதன் செயல்பாடுகளில் யாரும் அரசியல் செலுத்தி தலையிடக் கூடாது. பட்டியலின தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அது சம்பந்தமாக யார் தவறு செய்திருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள். அதற்கான அனைத்து பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்காக பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் இணைவார்கள்” எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!