”ஓசி பயணம்” விவகாரம்.. அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிறிது நேரத்திலே பதிவை நீக்கிய வானதி..

By Thanalakshmi VFirst Published Oct 1, 2022, 4:53 PM IST
Highlights

சுயமரியாதைக்காக போராடிய மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்வதா? என்றும் அமைச்சர் பொன்முடி  மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதனை சிறிது நேரத்திலே நீக்கியுள்ளார்.
 

இதுக்குறித்து அவர் தனது ட்வீட்டர் பகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

அரசுப்‌ பேருந்துகளில்‌ பண்கள்‌ இலவசப்‌ பயணம்‌ மேற்‌கொள்வது பற்றி உயர்கல்வித்‌ நுறை அமைச்சர்‌ பொன்முடி, “நீங்க எங்க போனாலும்‌ ஒசி பஸ்லதானே போறீங்க?” என்று கேட்டது தமிழக மக்களை குறிப்பாக பெண்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதைவிட பெண்களை யாரும்‌ அவமானப்பருத்தி விட முடியாது..

தி.மு.க. அமைச்சர் பொன்முடி ஓசி என இழிவுபடுத்தி பேசியதை தாங்கிக்‌ கொள்ள முடியாத, கோவையில்‌ அரசுப்‌ பேருந்தில்‌ பயணம்‌ செய்த மூதாட்டி துளசியம்மாள்‌ அவர்கள்‌, “அரசு பேருந்தில்‌ நான்‌ ஒசியில்‌ வரமாட்டேன்‌. எனக்கு டிக்கெட்‌ கொடுங்கள்‌” என்று அரசு பேருந்து நடத்துனரிடம்‌ கேட்கிறார்‌. அவர்‌, “டிக்கெட்‌ தர முழயாது” என்று மறுக்கிறார்‌. 

ஆனாலும்‌, “எனக்கு டிக்கெட் தந்தே ஆக வேண்டும்‌. நான்‌ ஓசியில்‌ பேருந்தில்‌ செல்லமாட்டேன்‌” என்று கூறி அடம்‌ பிடிக்கிறார்‌. இதனால்‌, அந்த மூதாட்டி துளசியம்மாளுக்கு டிக்கெட் கொடுக்கிறார்‌. அதன்‌ பிறகே அரசு பேருந்தில்‌ பயணம்‌ செய்கிறார்‌. இந்த காட்சி வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

தி.மு.க. அமைச்சர்களின்‌ அதிகார ஆணவத்திற்கு இந்த மூதாட்டி சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்‌. இந்நிலையில்‌, தனது சுயமரியாதைக்காக போராடிய மூதாட்டி துளசியம்மாள்‌ உள்ளிட்ட 4 பேர்‌ மீது, கோவை மதுக்கரை காவல்‌துறையினர்‌ வழக்குப்பதிவு செய்துள்ள தகவல்‌ அதிர்ச்சி அளிக்கிறது. 

மேலும் படிக்க:நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி

ஹிட்லர்‌, முசோலனை போன்ற சர்வாதிகாரிகளின்‌ ஆட்சியில்கூட இதுபோல நடந்திருக்காது. பொதுமக்களின்‌ அதுவும்‌ மூதாட்டியின்‌ சிறு எதிரப்பைக்கூட தாங்கிக்‌ கொள்ள முடியாத அளவுக்கு, அரசியலமைப்பு சட்டம்‌ வழங்கியுள்ள ஜனநாயகம்‌, பேச்சுரிமை, கருத்துரிமை, போராடும்‌ உரிமையை அப்பட்டமாக காலில்‌ போட்டு மிதித்துள்ளது தி.மு.க. அரசு

“இம்‌ என்றால்‌ சிறை வாசம்‌, ஏன்‌ என்றால்‌ வன வாசம்‌” என, கேள்விப்பட்டிருக்கிறோம்‌. அதனை இப்போது நேரிலேயே பார்க்கிறோம்‌. 24 மணி நேரமும்‌ புகழுரையாற்றும்‌ ஜால்ரா கூட்டங்கள்‌ முதலமைச்சர்‌ உள்ளிட்ட அதிகார மையத்தை சூழ்ந்திருப்பதால்‌ தான்‌, இது போன்ற ஜனநாயக பருகொலையில்‌ இறங்கியிருக்கிறார்கள்‌. 

தி.மு.க. அரசின்‌ இந்த சர்வாதிகாரப்‌ போக்கிற்கு, அதிகார ஆணவத்திற்கு மக்கள்‌ விரைவில்‌ முடிவு கட்டுவார்கள்‌. மூதாட்டி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, ஒசி என பெண்களை இழிவுப்பருத்திய அமைச்சர்‌ பொன்முடி மீது  வழக்குப்‌ பதிவு செய்ய வேண்டும்‌. முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, அமைச்சர்‌ பொன்முடியை அழைத்து, கண்டனம்‌ தெரிவிப்பதுடன்‌, பெண்களிடம்‌ பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்‌ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க:'ஓசியில் போகமாட்டேன் 'துளசியம்மாள் பாட்டி பின்னணியில் அதிமுக ஐடி விங்: நாடகம் அம்பலம்.. தேவையா இந்த அசிங்கம்?

click me!