RSS-க்கு மட்டும் அனுமதியா.? எங்களுக்கும் தடையை நீக்குங்க.. வம்படியா கோர்ட்டில் கேஸ்போட்ட திருமா, முத்தரசன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2022, 2:18 PM IST
Highlights

சமய நல்லிணக்கம் மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சமய நல்லிணக்கம் மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இம் மூன்று கட்சிகளும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதிக்க  கோரி வழக்கு தொடுத்துள்ளன.

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியது, சென்னை உயர்நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தமிழக அரசு அப்பேரணிக்கு தடை விதித்தது. இதையடுத்து  ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  உங்க சர்வாதிகார போக்குக்கு விரைவில் மக்கள் முடிவு கட்டுவார்கள்! திமுகவை அலறவிடும் அண்ணாமலை..!

இது தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம்  உள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக அறிவித்த சமூக நல்லிணக்க பேரணிக்கு, மறுபுறம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் தங்களது மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. அம்மனுவில்:  காந்தி ஜெயந்தி முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மை வலியுறுத்தும் வகையில் மதநல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்த அனுமதி கோரப்பட்டது,

இதையும் படியுங்கள்:  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவகத்தை மொத்தமாக பூட்டி சீல்... சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் அரசு மனிதசங்கிலிக்கு அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக எங்களுக்கு எந்த நோட்டீசும் அனுப்பாமல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம்-ஒழுங்கு  பிரச்சனை ஏற்படும் என்றும், அதே நாளில் ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி  எங்களது கோரிக்கையை நிராகரித்துள்ளது. எனவே மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும், எங்களைப் போன்ற இயக்கங்களையும் ஒரே மாதிரியாக அணுகுவது முறையல்ல.

நாங்கள் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலியை நடத்துகிறோம். எனவே தமிழக காவல்துறை எங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை, நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

click me!