ஆளுநருக்கு எதிராக போராட்டம் தேவையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த வானதி சீனிவாசன்

By Raghupati R  |  First Published Jan 10, 2023, 9:41 PM IST

தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது  தமிழகம் என சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.


வானதி சீனிவாசன் பேட்டிகோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஒரு கருத்தை சொல்றாரு அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை கவர்னர் சொல்ற கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருந்தால் கருத்துக்களால் எதிர்கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

அதனை விட்டு விட்டு போஸ்டர் அடித்து ஒட்டுவது போராடக்  கூடிய மனநிலைக்கு வருவது எந்த அளவுக்கு கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கிற பண்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஜனநாயக ரீதியில் இறங்குகின்ற இந்த நாட்டில் உங்களுடைய தரத்தை குறைத்துக் கொண்டு தெருச்சண்டை   போல தகுதியை  குறைத்துக் கொள்கிறார்கள்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக ஆளுநர் அழைப்பிதழ் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி,  தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது  தமிழகம் என சொல்லவில்லையா?... தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், பேசுவதற்கு மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது பால் விலை ,மின்சார கட்டணம் உயர்வு மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை திசை திருப்பும்  விதமாக  பிரச்சினையாக கிளப்புகிறார்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க..TN Assembly 2023: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!

click me!