EPS Vs OPS : நல்லவங்க அதிமுகவுக்கு தலைமை ஏற்கணும்..அப்போ? சர்ச்சையை கிளப்பிய நயினார் நாகேந்திரன் !

Published : Jun 21, 2022, 05:20 PM IST
EPS Vs OPS : நல்லவங்க அதிமுகவுக்கு தலைமை ஏற்கணும்..அப்போ? சர்ச்சையை கிளப்பிய நயினார் நாகேந்திரன் !

சுருக்கம்

EPS Vs OPS : தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக மக்களை மறைவில் இருந்து திமுக தூண்டுகிறது.அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி ஆகும். 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ‘ 63 கலைகளும் உருவான நாடு பாரத நாடு. சுவாமி விவேகானந்தர் வாக்கு இப்போது நடந்து வருகிறது. உலக நாட்டின் எங்கும் இல்லாத பெருமை இந்திய நாட்டுக்கு இருக்கிறது. 

கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கிறது. உலகத்தின் அனைத்து பிரதமர்களின் யோகா குருவாக மோடி திகழ்ந்துவருகிறார் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நாட்டுமக்களுக்கு நன்மை செய்யும் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி கழுதை தேர்ந்து கட்டெரும்பாகி காங்கிரஸ் இல்லாமல் போய்விட்டது. திமுகவுடன் காங்கிரஸ் இல்லை என்றால் தமிழகத்திலும் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும். பிரதமரின் அற்புதமான திட்டம் அக்னிபாத்.

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் 30 ஆயிரம் மாதம் சம்பளம் என்ற அற்புதமான திட்டம் உலகில் எங்கும் இல்லை. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ் கம்யூ இயக்கங்கள் மக்களை தூண்டி விடுகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக மக்களை மறைவில் இருந்து திமுக தூண்டுகிறது.அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி ஆகும். 

கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தொண்டர்களின் மனநிலைக்கேற்ப நல்ல தலைவராக இரண்டில் ஒருவர் யார் நல்லவரோ அவர் வரவேண்டும் தகுதியானவர் வரவேண்டும். அதிமுக கட்சியின் விதி 20 பி படி அனைத்து சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ளவேண்டும். நகர பஞ்சாயத்து செயலாளர் தொடங்கி பல உறுப்பினர்கள் எம்ஜிஆர் காலம் முதல் பொதுக் குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு திறமை மிக்க ஒரு தலைமை வேண்டும். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை சரிதான்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!