விராட் கோலிக்கு நாட்டுப்பற்றே இல்லை! சம்பாதிப்பது இந்தியாவில்…கல்யாணம் மட்டும் இத்தாலியிலா ? போட்டுத்தாக்கும் பாஜக எம்எல்ஏ !

Asianet News Tamil  
Published : Dec 20, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
விராட் கோலிக்கு நாட்டுப்பற்றே இல்லை! சம்பாதிப்பது இந்தியாவில்…கல்யாணம் மட்டும் இத்தாலியிலா ? போட்டுத்தாக்கும் பாஜக எம்எல்ஏ !

சுருக்கம்

BJP mla attack virat kohli about his marriage

கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவில் இருந்துதான சம்பாதித்து வருகிறார், ஆனால் தனது திருமணத்துக்காக இத்தாலிக்கு போய் செலவு செய்கிறார் என்றும் அவருக்கு நாற்றுப்பற்றே இல்லை என்றும் மத்தியபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ பன்னா லால் சாக்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமணம் அண்மையில் இத்தாலி நாட்டில் நடைபெற்றது.  இவர்கள் இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதி பாஜக  எம்.எல்.ஏ. பன்னா லால் சாக்யா  அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது விராட் கோலி இந்தியாவில் இருந்துதான் சம்பாதித்து வருகிறார். ஆனால், அவருக்கு இங்கு  திருமணம் செய்துகொள்ள ஓரிடத்தை தெரிவு செய்ய இயலவில்லை என கடுமையாக குறிப்பிட்டார். திருமணம் செய்து கொள்வதற்கு இந்தியாவில் இடமில்லை என்றால் இந்த பூமி என்ன தீண்டத்தகாததா ? என கேள்வி எழுப்பினார்.

ராமரும், கிருஷ்ணரும், விக்ரமாதித்ய மகாராஜாவும், யுதிஷ்டரும் இந்த மண்ணில்தான் திருமணம் செய்து கொண்டனர். கோலியும் இங்கேதான் திருமணம் செய்திருக்க வேண்டும். நாங்கள் யாரும் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாடு செல்லவில்லையே என பன்னா லால் சாக்யா தெரிவித்தார்.

கோலி இங்கே சம்பாத்தியம் செய்துவிட்டு இத்தாலியில் கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கிறார். இந்த தேசத்தின் மீது அவருக்கு எவ்வித மரியாதையும் இல்லை. இந்த செய்கை ஒன்றே போதும் அவர் தேசபக்தர் அல்ல என்பதை நிரூபிக்க என்று கூறிய பன்னா லால் சாக்யா, கோலக்கு நாற்றுப்பற்றே கிடையாது என கூறினார்.

ஒருவர் புகழின் உச்சியில் இருந்தால், அவரை நாம் நாயகனாக ஏற்றுக்கொள்ள அதுமட்டுமே போதுமானதாகாது, அவர் நாற்றுப்பற்று மிக்கவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு நாயகன் என்றால், அவர் தேசத்துக்கு நேர்மையானவராகவும் கடின உழைப்பு மூலம் பணம் ஈட்டுபவராகவும் இருக்க வேண்டும் என்று பன்னா லால் சாக்யா  குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

துறையூரை திமுகவுக்கு தாரை வார்க்கும் அ.தி.மு.க..! கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..! எடப்பாடிக்கு ரெட் அலர்ட்..!
ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!