பட்ஜெட் அன்று மரண அடி கொடுத்த ராஜஸ்தான் … இடைத்  தேர்தலில் மண்ணைக் கவ்விய பாஜக…

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பட்ஜெட் அன்று மரண அடி கொடுத்த ராஜஸ்தான் … இடைத்  தேர்தலில் மண்ணைக் கவ்விய பாஜக…

சுருக்கம்

BJP lost two mp contitiency in rajasthan

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மற்றும் ஆஜ்மீர் அகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மண்டல்கர் சட்டமன்ற  தொகுதிக்கும் நடந்த 29 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைடையே கடும் போட்டி இருந்தது.

இதே போன்று மேற்குவங்க மாநிலம் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கும் 29 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல்கர்  சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தகாடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சக்தி சிங் ஹதாவை 12,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இதே போன்று அம்மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பட்ஜெட் அன்று பாஜக மண்ணைக் கவ்வியது.

இதனிடையே மேற்குவங்க மாநிலம் உலுபேரியா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பாஜக வேட்பளரை தோல்வி அடையச் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!
மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?