விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயருமாம்? இவர் எந்த உலகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார்? வைகோ ஆவேசம்!

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 02:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயருமாம்? இவர் எந்த உலகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார்? வைகோ ஆவேசம்!

சுருக்கம்

MDMK General Secretary VAIKO condemned

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்று பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதற்கு, இவர் எந்த உலகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் என்றே தெரியவில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2018 - 19 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேர்மையான வெளிப்படையான அரசை நடத்துவோம் என 4 வருடங்களுக்கு முன்பு உறுதி அளித்திருந்தோம். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வலிமை அடைந்திருப்பதாகவும், விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்றும் கூறினார். அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்
குறித்தும் அவர் பேசி வருகிறார்.

நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் இதுவரையில்லாத அறிப்புகளில் விவசாய துறைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசயிகளுக்கான கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஊதியங்கள் உயர்த்தப்படுவதாக கூறினார். குடியரசு தலைவரின் மாத ஊதியம் ரூ.5 லட்சமாகவும், குடியரசு துணை தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாகவும் உயர்த்தப்படுவதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, அருண்ஜெட்லி எந்த உலகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயரும் என கூறியுள்ளார். இவர் எந்த உலகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் என்றே தெரியவில்லை. அதானி குழுமத்தை தான் விவசாயிகள் என நினைக்கிறார். கர்நாடக அரசு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்காத காரணத்தினால் டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கர் நிலம் பாழாகி உள்ளது. தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மோடி அரசு பச்சை துரோகம் செய்து வருகிறது.

கர்நாடக அரசியலை மனிதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பவர் கிரேட் அதானி மின் திட்டத்தின் கீழ் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக 800 கிலோ வாட் உயரழுத்த மின்சார கோபுரம் அமைப்பதால் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து விவசாயிகள் பேராடியதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வைகோ கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு அதிர்ச்சி... இதுதான் கடைசி சான்ஸ்... விஜயதாரணி எடுத்த பகீர் முடிவு..!
காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?