அனைத்து ரயில் நிலையங்களிலும் “வை-ஃபை” வசதி!! ரயில்வே துறைக்கான அதிரடி அறிவிப்புகள்

First Published Feb 1, 2018, 2:14 PM IST
Highlights
budget allocation and schemes to develop railway


2018-2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அறிவிக்கப்பட்ட ரயில்வே துறைக்கான சிறப்பு திட்டங்கள்:

1. ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. 4000க்கும் மேற்பட்ட ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

3. 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்படும்.

4. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்.

5. ரயில் தண்டவாளங்கள் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

7. அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்.

8. அனைத்து ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

9. பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.

10. 3600 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.

11. நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

12. 2019ம் ஆண்டுக்குள் 4000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

13. நாட்டில் உள்ள 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.

14. ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

15. 18 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
 

click me!