10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபை வசப்படுத்திய காங்கிரஸ் - பாஜகவுக்கு மரண அடி

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபை வசப்படுத்திய காங்கிரஸ் - பாஜகவுக்கு மரண அடி

சுருக்கம்

bjp lost in punjab

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளில் 65 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

பஞ்சாபில் கடந்த 10 ஆண்டுகளாக அகாலிதள்-பி.ஜே.பி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணிக்கு பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அலை வீசியது. ஆனாலும் மோடி அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனிடையே டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றத் தொடங்கியது. கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பஞ்சாபில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அம்மாநில கருத்துக் கணிப்புகள் கூட ஆம் ஆத்மி அங்கு அட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தன.

ஆனால் அதனை பொய்யாக்கிவிட்டு காங்கிரஸ் கட்சி அங்கு வரலாறு காணாத அளவுக்கு முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 67 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 22 இடங்களிலும் அகாலிதளம்- பாஜக கூட்டணி 27 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாபில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு மரண அடி விழுந்துள்ளது.

10 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் உற்சாகத்துடன் ஆட்சி அமைக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!