80 நிமிடங்களில் மெஜாரிட்டியை தொட்ட பா.ஜ.க - உ.பி.யில் அசுர வளர்ச்சி..!!

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
80 நிமிடங்களில் மெஜாரிட்டியை தொட்ட பா.ஜ.க - உ.பி.யில் அசுர வளர்ச்சி..!!

சுருக்கம்

uttarpradesh election result

யாரும் எதிர்பாராத வகையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 80 நிமிடங்களிலேயே பா.ஜ.க. மெஜாரிட்டியை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் வசம் மாறி மாறி இருந்த உத்தரப்பிரதேசம் பா.ஜ.க.வின் தாமரை வசம் சென்றடைகிறது.....

1968 முதல் 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கண்ட மாநிலம்  உத்தரப்பிரதேசம். 2000த்தில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. 2002 ல் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜூமே இம்மாநிலத்தை ஆண்டு வந்தன. 

முலாயம்சிங்கின் இரும்புக்கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில்   15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன. வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது முதலே  பா.ஜ.க.வின் கரமே ஓங்கியிருந்தது. சரியாக 80 நிமிடங்களில் மெஜாரிட்டியை அக்கட்சி எட்டிப் பிடித்தது.

பா.ஜ.க.மலர்ந்ததற்கான காரணம்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ராமர்கோயில் கட்டப்படும், தகுதி உள்ளவர்களுக்கே அரசுப் பதவி, விவசாய கடன் தள்ளுபடி, பள்ளி மாணாக்கர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய மடிக்கணினி, உள்ளிட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்தது. 

உத்தரப்பிரதேசத்தில் இம்முறை ஆட்சியை பிடித்தே தீருவது என்று கடந்த மூன்று வருடங்களாக கடுமையான உழைத்து வந்த பா.ஜ.க. தனது பலனை தேர்தல் களத்தில் அறுவடை செய்துள்ளது.

சமாஜ்வாதி சறுக்கியது ஏன்

சமாஜ்வாதி கட்சியின் பின்னடைவுக்கு முலாயம் சிங்கின் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகளும் பிளவுகளுமே முழு காரணம்....கட்சித் தலைவர் பதவியில் இருந்து முலாயமை நீக்கியது, சமாஜ்வாதி கட்சி எங்களுக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திற்கு நடையாய் நடந்தது, ஷிவ்பாலை தூக்கியெறிந்தது, என பின்னடைவுக்கான காரணங்களை அடுக்கலாம்....

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!