தாய்க்கு ஒப்பான தமிழுக்கு அவமரியாதை.. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. ஆர்பிஐ ஊழியர்கள் மீது பாஜக பாய்ச்சல்.!

By Asianet TamilFirst Published Jan 26, 2022, 8:45 PM IST
Highlights

அண்மையில்தான் தமிழக அரசு, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக அறிவித்தது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்றவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலைத் தொடர்ந்து, தமிழ்த் தாய் பாடும்போது எழுந்து நின்று மரியாதைச் செலுத்த வேண்டும். 

கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயனன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

 நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொணடாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளிலும் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களிலும்  தேசிய கொடியேற்றி குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கிளையில் குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதியில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர், எழுந்து நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கு வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதற்கு, ‘நீதிமன்றமே தேவையில்லை என்று கூறியிருக்கிறது’ என்று ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 

அண்மையில்தான் தமிழக அரசு, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக அறிவித்தது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்றவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலைத் தொடர்ந்து, தமிழ்த் தாய் பாடும்போது எழுந்து நின்று மரியாதைச் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் சில ஊழியர்களின் செயலுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரிசர்வ் வங்கியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிற சிலரின் வாதம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இது குறித்த சர்ச்சையில், எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசு நிர்வாக உத்தரவு எதுவும் இல்லை என்று உயர்நீதி மன்றம் கூறியிருந்த நிலையில், கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே. தேவையில்லாத வாதங்களை முன்வைத்து, நம் தாய்க்கு ஒப்பான தமிழ் மொழியின் மரியாதையை குலைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். தேவையில்லாது வாதம் புரிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு, நின்ற நிலையில் மனதார தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடவேண்டும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

click me!