இந்து வெறுப்பா? காங்கிரஸ் எதிர்ப்பா? பொய்ச்செய்தியை பரப்பினாரா டி.ஆர்.பி ராஜா?

By Narendran SFirst Published Jan 26, 2022, 7:38 PM IST
Highlights

2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது குடியரசு தின விழாவில் கர்நாடகா சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு பாஜக ஊடகப்பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது குடியரசு தின விழாவில் கர்நாடகா சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு பாஜக ஊடகப்பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 2022 இந்திய குடியரசு தினத்தின் டெல்லி அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் மற்றும் அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில், பங்கேற்ற சில அலங்கார ஊர்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், மன்னார்குடி திமுக எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இது எந்தமாதிரியான சுதந்திரப் போராட்ட வீரர் என குடியரசு தினத்தைக் குறிப்பிட்டு காமதேனு இடம்பெற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

 

Which is this 🧐!!! pic.twitter.com/ImKJMEbbTH

— Dr. T R B Rajaa (@TRBRajaa)

ஆனால் அது 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது குடியரசு தின விழாவில் கர்நாடகா சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படம் என தற்போது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அலங்கார ஊர்தியை உருவாக்கி அணிவகுப்பில் பங்கேற்கின்றன. 2022 குடியரசு தினத்தில் கர்நாடகா சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தொடர்பான அலங்கார ஊர்தி இடம்பெற்றது. கர்நாடகா அலங்கார ஊர்தியில் ஆஞ்சநேயர் உருவம் இடம்பெற்றதும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. இதுக்குறித்து பாஜக ஊடகப்பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கதில், இது 2013 ஆம் ஆண்டு சித்தராமையா முதல்வராகவும் டெல்லி மன்மோகன் பிரதமராக இருந்தபொழுது கர்நாடக சார்பாக அனுப்பப்பட்ட வாகனம். ஏற்கனவே மங்குனிகளாக இருக்கும் திமுக தத்திகளை  ஃபேக் நியூஸ் மூலம் முட்டாளாக மாற்றி வருவதற்கு நன்றி டி.ஆர்.பி.ராஜா என்று பதிவிட்டுள்ளார்.

 

Fake supplier FYI -

இது 2013ம் ஆண்டு சீதாராமையா முதல்வராகவும் டெல்லி மன்மோகன் பிரதமராக இருந்தபொழுது கர்நாடக சார்பாக அனுப்பப்பட்ட வாகனம்.

ஏற்கனவே மங்குனிகளாக இருக்கும் திமுக ஃபேக் நியூஸ் மூலம் முட்டாளாக மாற்றி வருவதற்கு நன்றி https://t.co/UwvP9wSFsq pic.twitter.com/Gwx8iZPRpP

— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar)

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் பகிர்ந்த காமதேனு இடம்பெற்ற அலங்கார ஊர்தி 2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் கர்நாடகா மாநிலம் தரப்பில் பங்கேற்றது என்றும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு பொய் செய்தியை பரப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் திமுக என்றாலே இந்து எதிர்ப்பு என்று பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்துக்கள் கடவுளாக மதிக்கும் காமதேனுவின் புகைப்படத்தை அதுவும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பொய் செய்தியை பகிர்ந்துள்ளதாக டி.ஆர்.பி.ராஜா மீது புகார் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றிருப்பதால் காங்கிரஸை குறைகூறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதோடு அணிவகுப்பில் இது இடம்பெறுவது தவறென்றால் காங்கிரஸே இதற்கு பொறுப்பு என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.  

click me!