மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக முன்னிலை... கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

By Asianet TamilFirst Published Oct 24, 2019, 8:53 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் முன்னிலை நிலவரம் தெரிந்துள்ள 103 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி 64 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன.
 

மகாராஷ்டிரா, ஹரியாணா மா நிலங்களில் பாஜகவே கூட்டணி முன்னிலை வகித்துவருகின்றன.


மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஹரியாணாவில் உள்ள 90 தொகுதிகளிலும் அக்டோபர் 21 அன்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இங்கே பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்த இரு மாநிலங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது. 


காலை 8.45 மணி நிலவரப்படி  மகாராஷ்டிராவில் முன்னிலை நிலவரம் தெரிந்துள்ள 103 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி 64 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன.


இதேபோல ஹரியாணாவில் 37 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. பாஜக 21 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்துவருவதால் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். 

click me!