ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! இவர் யார் தெரியுமா?

 
Published : Apr 23, 2018, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! இவர் யார் தெரியுமா?

சுருக்கம்

BJP leader arrested for sexually assaulting minor girl in train

ஓடும் இரயிலில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் ஆர்.கே. நகர் வேட்பாளர் பிரேம் ஆனந்த், POCSO சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார்.

திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் மர்ம நபர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த சிறுமி கதறி அழுது பெற்றோரை எழுப்பி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை சொன்னதும் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது தாம் பாஜக பிரமுகர் என்றும் வழக்கறிஞர் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய பிரேம் ஆனந்த், தென்சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாகவும், 2006-ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 1858 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர்,  அதற்கு முன்பு நடிகர் சந்தானத்துடன் கொடுக்கல் வான்கள் விவகாரத்தில் தில்லுமுல்லு செய்து செம்ம அடி வாங்கியவர் இந்த பிரேம் ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!