மழையில் பாஜக போட்டோ ஷூட்… மாட்டிக்கிட்ட பெண் பிரமுகர்… இதில் அண்ணாமலை பாராட்டு வேற

By manimegalai aFirst Published Nov 29, 2021, 8:42 PM IST
Highlights

மழையில் படகில் மக்களை சென்று காப்பாற்றிய பாஜக பெண் பிரமுகரின் போட்டோ ஷூட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர்.

மழையில் படகில் மக்களை சென்று காப்பாற்றிய பாஜக பெண் பிரமுகரின் போட்டோ ஷூட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 3 வாரங்களை கடந்தும் தமிழகத்தை மழையானது விட்ட பாடில்லை. அதில் குறிப்பாக சென்னையை மீண்டும் வச்சு செய்ய ஆரம்பித்து இருக்கிறது மழை. காற்றழுத்த தாழ்வு நிலை வலுவாக மாறி, மழை போட்டு தாக்கி வருகிறது.

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தென்காசி என மழை விடாமல் பெய்து தள்ளுகிறது. மழைநீர், வெள்ள பாதிப்பு, தத்தளிக்கும் சென்னை என்று டிசைன், டிசைனாக சென்னையில் தற்போதுள்ள நிலைமை நாள்தோறும் மாறி வருகிறது.

சாலைகளில் படகுகள் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களை தமிழக அரசும்,  அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி கை கொடுத்து வருகின்றன.

இதுபோன்ற தருணங்களில் மக்களுக்கு செய்யும் உதவிகளையும், ஒத்தாசைகளையும் சிலர் போட்டோ அல்லது வீடியோ எடுத்து இணையத்தில் உலவ விடுவர். அப்படி போடப்படும் பதிவுகள் சில நேரங்களில் தடம்மாறி பாராட்டுகளுக்கு பதில் விமர்சனத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அப்படித்தான் பாஜக பெண் பிரமுகர் கலா அறிவுச்செல்வம் என்பவர் மழையில் சிக்கியவர்களை படகில் சென்று தனியாளாக காப்பாற்றினார் என்று ஒரு செய்தி இணையத்தில் வைரலானது.

பாஜகவின் தேனி மகளிர் அணி, டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:

ஆண்களே வெளி வராத நிலையில்,  ஒற்றை ஆளாக ஓர் ஆள் அடி தண்ணீரில்(27.11.2021)நந்திவரம் கூடுவாஞ்சேரி மக்களை படகு மூலம் பாதுகாப்பான இடத்துக்குஅழைத்து வந்தவர்தான்.

திருமதி.#கலா_அறிவுச்செல்வம். இதுதான் பாஜக, இந்த செய்திகள் எந்த ஊடகங்களிலும் வராது நாம்தான் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த பதிவை தமிழக பாஜகவானது ரிடுவிட் செய்து பாராட்டி உள்ளது. இது போதாது என்று தமிழக பாஜகவின் தலைவரான அண்ணாமலையும் இந்த டுவிட்டர் பதிவை ரிட்வீட் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். அட… பெண் பிரமுகர் மழையில் தனியாளாக சென்று மக்களை படகில் சென்று மீட்டு காப்பாற்றி உள்ளாரே என்று பலரும் நினைத்து இருக்க… அது ஒரு போட்டோ ஷூட், செட்டப் என்று இணையத்தில் போட்டு தாக்கி வருகின்றனர் மக்கள்.

கலா அறிவுச்செல்வம் முழங்கால் அளவு தண்ணீரில் உட்கார்ந்து கொண்டு போட்டோ எடுத்துள்ளார். அது எப்படி… ஒரு ஆள் உயர மனிதன் அளவுக்கு தண்ணீர் வரும்.. அப்படியே இருந்தாலும் அவரின் போட்டோவில் காணப்படும் வீடுகளின் கேட் எப்படி உயரம் குறைவாக இருந்தது என்று கேள்வி கேட்டு தாளித்து வருகின்றனர்.

இன்னும் ஒரு சிலரோ…. உங்களுக்கு தான் போட்டோஷாப், போட்டோ ஷூட் என எதுவுமே எடுக்க தெரியலை…. எதுக்கு இந்த வீண் விளம்பரம் என்று கேலி,கிண்டல் செய்துள்ளனர்.

பாஜக பெண் பிரமுகர் முட்டி போட்டு உட்கார்ந்திருக்கார், நல்லாவே தெரிகிறது இது போட்டோ ஷூட் என்று அதகளம் பண்ணி இருக்கின்றனர். வேறு ஓருவரோ… இந்தம்மாகிட்ட தான் படகு இருக்கே.. அதில் போலாமே? ஏன் இப்படி செய்திருக்கிறார் என்று கேள்விகளும் கேட்டுள்ளனர்.

வேறு ஒரு சிலரோ…. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கலாய்க்கிறீங்க, போட்ல போனாலும் சரி, தண்ணில போனாலும் சரி இப்படியா கிண்டல் பண்ணுவது என்று சரண்டர் ஆகி இருக்கின்றனர்.

இதெல்லாம் போட்டோ ஷூட் என்று பார்த்தாலே தெரியும் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ரிட்வீட் செய்தார்? அவராவது யோசிச்க வேண்டாமா? என்று அன்பாக சிலர் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்…!!

click me!