மோடியே எங்கள் பக்கம்ன்னு சொல்லாம சொல்லும் ஒபிஎஸ்...! ஆனாலும் போட்டு தாக்குவோம்ன்னு செயல்படும் தமிழக பாஜக...!

First Published Feb 17, 2018, 11:12 AM IST
Highlights
BJP is acting in the fight to admk


ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் தான், கேக்கை அரிவாளால் வெட்டும் நிலை உள்ளது எனவும் பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது எனவும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருவதாகவும் ஆனால் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார். 

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது எனவும் தெரிவித்தார்.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர் என குறிப்பிட்டார் பொன்னார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார். 

இவ்வாறு அடிக்கடி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே அணிகளை இணைத்தேன் எனவும் எனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் தெரிவித்தார். 

இதன்மூலம் மோடியே எங்கள் பக்கம்ன்னு சொல்லாம சொல்லியுள்ளார் பன்னீர்செல்வம். ஆனாலும் குறை கூறுவோம் என்ற விதத்தில் ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் தான், கேக்கை அரிவாளால் வெட்டும் நிலை உள்ளது எனவும் பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது எனவும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 
 

click me!