
தமிழையும் தமிழ்நாட்டையும் பாஜகதான் காப்பாற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் பழமையான மொழி என கூறியதை சுட்டிக்காட்டினார். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்கின்றனவே தவிர தமிழ் மொழியை வளர்ப்பதில் உண்மையான கவனம் செலுத்தவில்லை.
தமிழையும் தமிழ்நாட்டையும் பாஜகவால்தான் மட்டுமே காப்பாற்ற முடியும் என தமிழிசை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இம்முறையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அது மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதால், கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
அப்படியென்றால் பாஜக தேசிய தலைமை மற்றும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு?