கஷ்டப்படுத்தும் பாஜக அரசு... கண்டு கொள்ளாத திமுக அரசு... ஆத்திரப்படும் டி.டி.வி.தினகரன்..!

Published : Jul 02, 2021, 12:27 PM IST
கஷ்டப்படுத்தும் பாஜக அரசு... கண்டு கொள்ளாத திமுக அரசு... ஆத்திரப்படும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு குறித்து மத்திய- மாநில அரசுகளை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு குறித்து மத்திய- மாநில அரசுகளை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. சிலிண்டர் விலையும்  ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், ‘’விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக்  கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.

பெட்ரோல் - டீசலுக்கு  வாட்  வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற  மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு  உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!