மம்தாவுக்கு மானாவாரியா டஃப் கொடுக்கும் பாஜக.. உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணியை ஊதித்தள்ளிய செம சம்பவம்

By karthikeyan VFirst Published May 23, 2019, 2:57 PM IST
Highlights

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அனைத்தும்(திமுகவை தவிர) மண்ணை கவ்வியுள்ளன.
 

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அனைத்தும்(திமுகவை தவிர) மண்ணை கவ்வியுள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை விட அதிகமாக எதிர்த்தது பிராந்திய கட்சிகள் தான். தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ்(சமாஜ்வாதி) - மாயாவதி(பகுஜன் சமாஜ்), ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தனர். 

மம்தா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் ஆகியோர் மூன்றாவது அணியை அமைக்கக்கூட முயன்றனர். பாஜகவை கடுமையாக எதிர்த்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மக்களவை தேர்தலில் மட்டுமல்லாமல், சட்டமன்ற தேர்தலிலும் மண்ணை கவ்வியுள்ளது. ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பெரிதாக பலமோ ஆதரவோ இல்லாததால் வழக்கம்போல பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியே 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

ஆனால் மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் சவாலை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 22ல் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக, மம்தாவிற்கு கடும் சவால் அளித்துள்ளது. பாஜக மேற்கு வங்கத்தில் இவ்வளவு சவால் கொடுக்கும் என்று மம்தா பானர்ஜி நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அந்தளவிற்கு பாஜக சவால் அளித்துவருகிறது. பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரஸுக்குமான இடைவெளி வெறும் 3 தொகுதிகளாகத்தான் உள்ளது. 

அதேபோல உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இணைந்து தேர்தலை சந்தித்தன. உத்தர பிரதேசத்தில் பிராதன கட்சிகளான அவை இரண்டும் ஒன்று சேர்ந்துகூட பாஜகவை ஒன்றுமே செய்யமுடியவில்லை. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வெறும் 21 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் இருந்தன. ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்தவர்களின் வாயை அடைத்துவிட்டது பாஜக. மேற்கு வங்கத்தில் பாஜக இவ்வளவு டஃப் கொடுக்கும் என மம்தா எதிர்பார்த்திருக்கவே மாட்டார். 
 

click me!