
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ தமிழகத்தில் பாஜக கட்சி மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் அலை அலையாக பாஜகவை நோக்கி வருகின்றனர்.
தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர். இது திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும். திருமங்கலம் பார்முலா என்று சொல்லி பணத்தினை தந்தனர். இன்று திராவிட மாடல் என்று கூறுகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். கொடுத்த வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேளுங்கள்.
பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி ரூ.1000 எங்கே, எல்லாவற்றையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்பது தான் திமுகவிற்கு வசதி. தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய திட்டத்தை கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தமிழக மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது. மக்களை பிரித்தாழும் சூழ்நிலைகள் மாறியாக வேண்டும், வரக்கூடிய 2024ல் மீண்டும் பிரதமர் மோடி பிரதமராக வரும் போது உலகில் இந்தியா முதல் நிலை நாடாக உருவாகி தீரும்’ என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!