
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி, ‘ சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தது போல 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நீதி போதனைகளை பாடமாக கற்பிக்க வேண்டும். இந்த பாடத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தனி மனிதனின் வளர்ச்சிக்கு அடிகோளாக கல்வி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி வகுப்பறையில் உருவாக்கப்படும் என்பார்கள்.
அப்படியான வகுப்பறையில் ஆசிரியர்களை மிரட்டுவதும் அடிப்பதும், போதை பொருட்களை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. கர்நாடகா - தமிழகம் என்பது சகோதர அண்டை மாநிலங்கள். மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டக்கூடாது. கர்நாடகா அரசு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முனைப்புக்காட்டி வருகிறது. மேகதாது அணையை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்புக்காட்டி, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்ததை பாமக வரவேற்று நன்றி கூறிக்கொள்கிறோம். ஒசூர் தொழில் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கும் வகையில் வேகமாக வளர்ந்து வருவதால், உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.ஆளுங்கட்சி தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிதான். பாமகவை பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது’ என்று பேசினார்.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!