திமுக அரசை கலைக்க பாஜக சதி.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் கே.என் நேரு

Published : Jun 13, 2022, 02:03 PM IST
திமுக அரசை கலைக்க பாஜக சதி.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் கே.என் நேரு

சுருக்கம்

DMK : எப்படியாவது ஜாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.

திமுக Vs பாஜக

செங்கல்பட்டில், நகர திமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா, கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று சொல்கிறார்.சிறு பிரச்சனையை கூட, பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது பாஜக. 

எப்படியாவது ஜாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், ஆட்சியை எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த காலத்தில், திறம்பட செயல் பட்டவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அதிக ஆட்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. 

தமிழக பாஜக

அதிமுக சற்று கம்மி இருக்கும் காரணத்தினால், அவர்கள் பெரியதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது. விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார். அமைச்சர் கே.என் நேரு பாஜக மீது கூறிய பரபரப்பு குற்றசாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!