MK Stalin Vs RN Ravi : தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.இதனைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடி அவர்களை ஆளுநர் சந்திக்க உள்ளார். இதனையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என் ரவி சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
திமுக Vs ஆளுநர் ஆர்.என் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மொத்தம் 22 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநர் ரவி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது தேசிய அளவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வரும் 16ம்தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது. பாஜக அல்லாத மாநில கட்சிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாகவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல்
தேசிய அளவில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பல்வேறு கட்சிகள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முதல்வர் ஸ்டாலினும் மூத்த திமுக உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.இதனைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடி அவர்களை ஆளுநர் சந்திக்க உள்ளார்.
டெல்லி பயணம்
இதனையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்என் ரவி சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதே சமயம்,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது.
அதன்படி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைக் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.மேலும்,தேசிய ஜனநாயகக் கூட்டணி,ஐக்கிய முற்போக்கு கூட்டணி,தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் ஆர்.என் ரவியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!
இதையும் படிங்க : மொபைல் முழுக்க 150 பெண்களின் ஆபாச வீடியோக்கள்.. பாத்ரூமில் எடுத்த போது வசமாக சிக்கிய சாஃப்ட்வேர் என்ஜினீயர்