ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக ஏன் தோத்துச்சு தெரியுமா? காரணம் சொல்றார் கர்னி சேனா தலைவர் ….

Asianet News Tamil  
Published : Feb 02, 2018, 08:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக ஏன் தோத்துச்சு தெரியுமா? காரணம் சொல்றார் கர்னி சேனா தலைவர் ….

சுருக்கம்

BJP fails in Rajastan Karni sena told the reason

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க  மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக  தோல்வியடைந்ததற்கு பத்மாவத் படத்தை தடை செய்யாததுதான் காரணம் என கர்னி சேனா தலைவர் யோகேந்திரா சிங் கால்வி  கண்டுபிடித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஆல்வார் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர்க் சட்டசபை தொகுதிக்கும், கடந்த 29 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்த மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

இதே போன்று மேற்குவங்க மாநிலத்தில் ஒரு மக்களைத் தொகுதிக்கும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக படுதோல்வியடைந்ததது.

ராஜபுத்ர சமூதாயத்தைச் சேர்ந்த, ராணி பத்மினி வரலாற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள, பத்மாவத் ஹிந்தி திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மற்றும் ஆல்வாரில் பசு பாதுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் மாநில அரசுக்கு எதிராக அமைந்தது என்றும், இது காங்கிரசுக்கு  வெற்றியை தேடி தந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் இந்த படுதோல்விக்கு என்ன காரணம் கர்னிசேனா தலைவர் யோகேந்திரா சிங் கால்வி கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்னிசேனா அமைப்பின் தலைவர் யோகேந்திரா சிங் கால்வி,  சர்ச்சை படமான பத்மாவத்தை தடை செய்யமால் விட்டதே தேர்தல் தோல்விக்கு காரணம் என தெரிவித்தார்.

பத்மாவத்தை நிரந்தரமாக தடை செய்திருந்தால் ஆளும் கட்சியான பாஜக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்றும் இது தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் பிரதமருக்கு ஆலோசனை கொடுத்திருப்பேன் என்றும் யோகேந்திரா சிங் கால்வி  தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனம்..! கோட்டை விட்ட இபிஎஸ்... கொத்தாய் தூக்கிய விஜய்..!