பாஜக நிர்வாகிகயை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ்ரோடியை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக-பாஜக மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா என தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாக்கு சதவிகிதிம் பிரிந்த நிலையில் தேர்தலில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் தான் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டது. இந்த கூட்டணியும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தோல்விகளை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விட வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவு கேட்டும் கடைசிவரை இழுத்தடித்து பின்னர் பாஜக ஆதரவு வழங்கியது.
இபிஎஸ் உருவப்படம் எரிப்பு
இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜக ஐடி பிரிவு நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல்குமாரை தொடர்ந்து மேலும் சில மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாஜகவினர் அதிமுகவிற்கு எதிரான கருத்துகளை கூற தொடங்கினர். ஒரு சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தினர். கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டமும் நடத்தினர். இதனால் அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இந்தநிலையில் அதிமுவை சமாதானப்படுத்தும் வகையில், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி நீக்கம்
இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாஜகவின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
காங். எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் கங்கிரஸ் கட்சியினர்!!