
பாஜகவின் தேர்தல் அறிக்கை வரும் நாளை அல்லது நாளை மறுதினம் எட்டாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே லோக்சபா தேர்தல் என்றால் கடைசி நிமிடத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது பாஜகவின் வழக்கம். அதற்கு உதாரணமாக கடந்த மூன்று லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அறிவித்த பின்னர்தான் பாஜக தேர்தல் அறிக்கையை அறிவித்திருந்தது.
2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் ஏப்ரல் 20ம் தேதி தேர்தல் தேதி என அறிவித்திருந்த நிலையில் மார்ச் 22ஆம் தேதி காங்கிரசும் பாஜக ஏப்ரல் 8 ஆம் தேதி தேதியும் தேர்தல் அறிக்கையை அறிவித்திருந்தது.
2009 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஏப்ரல் 16 தேர்தல் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 24ஆம் தேதி காங்கிரசும் ஏப்ரல் 3 ஆம் தேதி பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.
இதேபோன்று 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, மார்ச் 26 ஆம் தேதி காங்கிரசும் தேர்தல் நாளான ஏப்ரல் ஏழாம் தேதியே பாஜக தேர்தல் அறிக்கையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
பாஜகவை பொருத்தவரையில் கடைசி நேரத்தில் தேர்தல் அறிக்கையை அறிவித்தால் அது வெற்றிக்கு சாதகமாக அமையும் என நம்புகிறது.
பாஜக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரசுக்கு எதிராக அதே சமயத்தில் மக்கள் மனதில் இடம் பெறக்கூடிய பல முக்கிய திட்டங்கள் இருக்கக்கூடும் என்றும் அதில் குறிப்பாக விவசாயிகள் நலன், வேலை வாய்ப்புகள், உள் நாடு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து மேலும் பல புதிய அறிக்கைகள் அறிக்கைகள் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக 20 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மும்முரமாக செயல்பட்டு, கடைசி நேரத்தில் தேர்தல் அறிக்கையை அறிவித்து வெற்றி வாய்ப்பை பெறுவதில் பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்